×

காந்தி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

 

சத்தியமங்கலம், மார்ச் 10: சத்தியமங்கலம் அடுத்துள்ள காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி செயலாளர் சிராஜீதீன் தொடங்கி வைத்தார். முதல்வர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றதோடு ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக சத்தியமங்கலம் சார்பு நீதிமன்ற சபீனா கலந்து கொண்டு 270க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் கல்லூ தலைவர் தமிழரசன், துணைத்தலைவர் அப்துல் ரகுமான், இயக்குனர்கள் கோவிந்தராஜ், சுலைமான், சுப்பிரமணியம், முகமது ஜமால்காதர், கார்த்தியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்த்துறை தலைவர் செந்தில் நன்றி கூறினார்.

Tags : Gandhi College ,Sathyamangalam ,convocation ,Gandhi ,Arts and Science College ,College Secretary ,Sirajideen ,Principal ,Marimuthu ,
× RELATED பிளஸ் 2 பொதுத்தேர்வில் 360 பேர் ஆப்சென்ட்