×

செங்கோட்டையில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக திட்டங்களை தந்தது திமுக அரசு

செங்கோட்டை, மார்ச் 10: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நிதி, அனைத்து உள்ளாட்சிகளிலும் நியமன உறுப்பினர்களாக நியமித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவிக்கும் கூட்டம் செங்கோட்டையில் நடந்தது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை, நகர செயலாளர் வெங்கடேசன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வளன் அரசு, செங்கோட்டை நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவரும், செங்கோட்டை கலைஞர் தமிழ் சங்கச் செயலாளருமான ஆபத்துக்காத்தான் வரவேற்றார். நகரத் துணைச் செயலாளர் ஜோதிமணி தொகுத்து வழங்கினார். நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் வாழ்த்துரை வழங்கினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் தீபக்நாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவிலான திட்டங்களைத் தந்தது கலைஞர், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆகும். மாற்றுத்திறனாளிகளை கடவுளின் சிறப்பு குழந்தைகள் என கலைஞர் குறிப்பிடுவார். தற்போதைய முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நிதி, உள்ளாட்சிகளில் நியமன உறுப்பினர் பதவியையும் வழங்கினார். அவருக்கு தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சார்பாக நன்றியை தெரிவிக்கவே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அப்துல்காதர், சுந்தரமகாலிங்கம், கனிமொழி, ஷேக் தாவுது, ரஹீம், ஜேசுராஜன், தமிழ்ச்செல்வி, நசீர், பேபி ரஜப் பாத்திமா, மஹ்முதா, முத்துக்குமார், இசக்கிபாண்டியன், இஸ்மாயில், லிங்கராஜ், நகர செயலாளர்கள் சாதிக், பீர் முகமது அப்பா மற்றும் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். கணேசன் நன்றி கூறினார்.

Tags : Chief Minister ,Sengottai ,DMK government ,Tenkasi South District DMK ,Jayapalan ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்