சென்னை: சென்னையில் உரிமத்துடன் துப்பாக்கி வைத்துள்ள 2,336 பேரில் 70% பேர் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாக காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் 1,027 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள், வெப் கேமராக்கள் பொருத்தப்படும். தேர்தலுக்காக தற்போது வரை 56 பறக்கும் படைகள், 56 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
