×

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வர முயற்சிக்கும் ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

 

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வர முயற்சிக்கும் ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய அரசிலமைப்பு சட்டத்தை சிதைத்து அதன் அடிப்படை கட்டமைப்பையே மீறுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் சட்டப்பேரவை மீதான நம்பிக்கை சீர்குலைந்துவிடும். சட்டப்பேரவை மீதான நம்பிக்கை சீர்குலைவதால் மாநிலத்தில் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பே முனை மழுங்கிப் போய்விடும்; நாடாளுமன்ற ஜனநாயகத்தையே தலைகீழாக திருப்பக்கூடியது. ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவை அதிபர் ஆட்சிமுறைக்கு வழிவகுக்கும் திட்டம் என்று கூறியுள்ளார்.

 

 

Tags : Chief Minister ,MK Stalin ,Union Government ,Chennai ,
× RELATED தமிழ்நாடு-புதுச்சேரி...