- உச்ச நீதிமன்றம்
- அந்தூர் அரசு மருத்துவமனை
- மகளிர் தினம்
- அந்தியூர்
- சர்வதேச மகளிர் தினம்
- அஇஅதிமுக
- வி.என்.சுப்பிரமணியம்
அந்தியூர், மார்ச் 9: அந்தியூர் அரசு மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அதிமுக பிரமுகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான வி.என்.சுப்பிரமணியம், மகளிரின் உரிமைகள், கடமைகள், கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் உள்ள அனைத்து துறைகளிலும் பாலின பாகுபாடுகள் இல்லாமல் சமத்துவத்துடன் வாழ்தல் குறித்து விளக்கிக்கூறினார்.
பின்பு அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த செலிவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று, காவல் நிலையம், பத்ரகாளியம்மன் கோயில் பகுதிகளில் மகளிருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
