×

ஜெயங்கொண்டத்தில் 1300 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு

ஜெயங்கொண்டம் மார்ச் 9: திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் எஸ்பி விஷ்வேஷ் பா சாஸ்திரி வழிகாட்டுதலின்படி டிஎஸ்பி தினேஷ்குமார் மேற்பார்வையில் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராம பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை ஹான்ஸ், பான் மசாலா, குட்கா, கூல் லிப் உட்பட போதை பொருட்களை போலீசார் அன்றாடம் பறிமுதல் செய்து பலரை கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று செங்குந்தபுரம் அருகே உள்ள நகராட்சிக்கு உட்பட்ட மக்கா கழிவுகள் அகற்றும் பகுதியில் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கோதண்டராமன், பூபதி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையில் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள 1300 கிலோ பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை ஹான்ஸ், பான் மசாலா, குட்கா, கூல் லிப் போன்றவற்றை காவல்துறையினர் நகராட்சி பணியாளர்களின் உதவியுடன் அழித்தனர்.

 

Tags : Jayankondam ,Trichy Zone ,IG ,Balakrishnan ,SP ,Vishwesh Pa Shastri ,DSP ,Dinesh Kumar ,Tamil Nadu government ,
× RELATED வடக்கலூர் கிராமத்தில் வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி சிறப்பு பூஜைகள்