×

வடக்கலூர் கிராமத்தில் வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி சிறப்பு பூஜைகள்

குன்னம், மார்ச் 9: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வடக்கலூர் கிராமத்தில் வராகி அம்மனுக்கு பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பஞ்சமி திதியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், இளநீர், தயிர் உட்பட 18 மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை கோயில் குருக்கள் கார்த்திக் மற்றும் சண்முகம் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் வடக்கலூர் அகரம் கழனிவாசல் கிராம மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

 

Tags : Varaghi Amman ,Panchami Tithi ,Vadakkalur ,Kunnam ,Kunnam taluk ,Perambalur district ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் 1300 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு