×

அரசு ஊர்தி ஓட்டுநர் சங்க கூட்டம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

அரியலூர், மார்ச் 9: தமிழகத்தில் அரசுத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்டத் தலைவராக கார்த்திகேயன், செயலாளராக சுரேஷ், பொருளாளராக குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், தமிழகம் முழுவதும் அரசுத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரியலூரில் மாவட்ட சங்க கட்டிடம் கட்ட இடம் ஒதுக்க வேண்டும். கழிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதில் புதிய வாகனங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Tags : Government Vehicle Drivers Association ,Ariyalur ,Tamil Nadu ,Ariyalur Panchayat ,Union ,District Government Vehicle Drivers Association General Committee… ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்