×

ரூ.17 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை

 

நாமக்கல், மார்ச் 9: நாமக்கல் கோட்டைரோட்டில், உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, மோகனூரை சேர்ந்த வியாபாரிகள் காய்கறி, பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். சந்தைக்கு நேற்று 38.50 டன் காய்கறிகள் மற்றும் 8 டன் பழங்கள் என மொத்தம் 46.50 டன் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். இவை ரூ.17.18 லட்சத்திற்கு விற்பனையானது.
இவற்றை 9 ஆயிரத்து 379 பேர் வாங்கி சென்றனர்.கடந்த வாரத்தை விட காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்தது. விலை சற்று உயர்ந்திருந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.32-க்கு விற்பனையான கத்தரிக்காய் நேற்று கிலோ ரூ.40-க்கு விற்பனையானது. சின்னவெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி வரத்து தினசரி மார்க்கெட் மற்றும் உழவர்சந்தைக்கு அதிகரிரித்துள்ளது. இதனால் இவற்றின் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ சின்னவெங்காயம், பெரிய வெங்காயம் போன்றவை ரூ. 20 முதல் ரூ. 25க்கு விற்பனையானது.

Tags : Namakkal ,Namakkal Kottayam Road ,Senthamangalam ,Erumapatti ,Mohanur ,
× RELATED அண்ணமார் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா