பென்னாகரம், மார்ச் 8: ஒகேனக்கல்லில், சுற்றுலாத்துறை சார்பில் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட மசாஜ் செய்யும் இடத்தை கலெக்டர், எம்பி ஆகியோர் திறந்து வைத்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் அருவிகளில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்கின்றனர். இந்நிலையில், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் ரூ.18.50 கோடியில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக மசாஜ் செய்யும் அறை, உடை மாற்றும் அறை, நடைபாதை, ஐந்தருவியை ரசிக்கக்கூடிய உயர்மட்ட பார்வை கோபுரம், கழிவறைகள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
