- அமைச்சர்
- வி.கணேசன்
- தொழில் நலன்புரி மற்றும் திறன் அபிவிருத்தித் திணைக்களம்
- சென்னை
- குற்றாலம்
- மாமல்லபுரத்தில்
- வால்பாறை…
சென்னை: தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ரூ.4.39 கோடி செலவில் தொழிலாளர்களுக்கு ஓய்வு இல்லங்களை அமைச்சர் சி.வி.கணேசன் திறந்து வைத்தார். தொழிலாளர்கள் குடும்பத்துடன் சென்று தங்குவதற்காக சுற்றுலா தலங்களான குற்றாலம், மாமல்லபுரம் மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் விடுமுறை இல்லங்களும், தொழிற்சங்க பிரதிநிதிகள் சென்னையில் தங்குவதற்காக ஜீவா இல்லம் ஆகியவை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் செயல்படுகிறது.
அமைப்புசார் தொழிலாளர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் தங்குவதற்காக கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில், சிங்காரவேலர் ஓய்வு இல்லத்தினை ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடத்தை 25.8.2025 அன்று முதல்வர் திறந்து வைத்தார்.
அமைச்சர் சி.வி.கணேசன் குற்றாலத்தில், திரு.வி.க. ஓய்வு இல்லத்தினை ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை 18.12.2024 அன்று திறந்து வைத்தார்.
சட்டமன்ற பேரவை மானியக் கோரிக்கையின்போது தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் சென்னை, ஜீவா இல்லம் மற்றும் மாமல்லபுரம், ஜவஹர்லால் நேரு ஓய்வு இல்லம் புதுப்பிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி சென்னையில், தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்குவதற்காக ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட சென்னை, ஜீவா இல்ல கட்டிடத்தையும், மாமல்லபுரத்தில் அமைப்புசார் தொழிலாளர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் தங்குவதற்காக ரூ.3.01 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மாமல்லபுரம், ஜவஹர்லால் நேரு ஓய்வு இல்லம் ஆகியவற்றை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் திறந்து வைத்தார்.
