சென்னை: சமூகத்தின் அடிமை விலங்குகளை உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “பெண்களுக்கான திட்டங்களைச் சலுகைகளாக அல்லாமல், உரிமைகளாக்கி – “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” என வீறுநடைப் போட செய்திருக்கிறது நம் திராவிடமாடல் அரசு!
இந்தியாவுக்கே வழிகாட்டும் மகளிர் நலத் திட்டங்கள் மென்மேலும் தொடர, மாண்புமிகு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களின் கரத்தை அனைவரும் இணைந்து வலுப்படுத்துவோம்.
மகளிர் உயர மாநிலம் உயரட்டும்!” என பதிவிட்டுள்ளார்.
