×

திருமண்டல தேர்தலில் டோனாவூர் சேகரத்தில் வெற்றி பெற்றவர்கள்

நெல்லை, பிப். 10:   திருமண்டல தேர்தலில் டோனாவூர் சேகரத்தில்  திரளானோர் வெற்றி  பெற்றனர். கடந்த 7ம்தேதி நடந்த நெல்லை திருமண்டல தேர்தலில் டோனாவூர் சேகரத்தின் சார்பில் பேராய பெருமன்றத்திற்கு
நெல்சன்துரை தேவமணி, தயாளதுரைசிங், சத்ய சங்கீதா, பிலிப் பால்துரை ஆகிய 4பேர் வெற்றி பெற்று  தேர்ந்தெடுக்கப்பட்டனர். சேகர மன்றத்திற்கான தேர்தலில் டேவிட் பால்ராஜ், அகஸ்டின் ஜெயகுமார், ராஜசிங், யோபுதாசன், ஜெயசீலன், ஜெயபால், ஸ்டீபன் பேரின்பராஜ், ஜெனித்துரை, ராபின் ராஜ்குமார், சிமியோன் சாமுவேல்ராஜ், ஈசாக்கு, ரமன்சிங், ரோஸ்செல்வன் ஆகிய 13 பேரும் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Tags : Winners ,constituency election ,Donavur Collection ,
× RELATED ஐஎப்எஸ் இறுதி தேர்வு முடிவு வெளியீடு: இந்திய அளவில் 147 பேர் தேர்ச்சி