சென்னை: தொட ர்ந்து தன்னை அனைவரும் காப்பி அடிப்பதாகச் சொல்லும் தவெக தலைவர் விஜய், நேற்று அறிவித்துள்ள வாக்குறுதிகளில் பெரும்பாலானவை காப்பி அடிக்கப்பட்டதாகவே உள்ளன என நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். பெயரை மட்டும் மாற்றி வைத்துள்ளார் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு செயல்படுத்தும் திட்டங்களை ஒப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு செயல்படுத்தும் திட்டங்கள்:
* ஆதாபித்தா நிதி: 18 முதல் 59 வயது வரை உள்ள தகுதியுள்ள அனைத்துப் பெண்களுக்கும்| மாதம் ரூ.1,500 நிதியுதவி.
* தல்லிகி வந்தனம்: 1-12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 நிதியுதவி.
* தீபம் 2.0: ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் கட்டணமில்லாமல் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்.
* ஸ்ரீ சக்தி: அனைத்து மாநில அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
* சக்தி டீம்: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பெண்களை மட்டுமே கொண்ட சாதாரண உடை அணிந்த சிறப்புப் போலீஸ் படைகள்.
விஜய் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த திட்டங்கள்:
* மதிப்புமிகு மகளிர் திட்டம்: 60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 நிதியுதவி.
* காமராஜர் கல்வி உரிமைத் திட்டம்: 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டுக்கு ரூ.15,000 நிதியுதவி.
* அன்னபூரணி சூப்பர் 6: ஒவ்வொரு குடும்பத்திற்கு கட்டணமில்லாமல் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்.
* வெற்றிப் பயணம் திட்டம்: அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
* ராணி வேலுநாச்சியார் படை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகச் பெண்களை மட்டுமே கொண்ட சாதாரண உடை அணிந்த சிறப்புப் போலீஸ் படைகள்.
