×

ஆர்.என்.ரவி பாஜ தொண்டர் மே.வங்க ஆளுநர் போஸ் பாஜ அரசின் அழுத்தத்தால் வௌியேறினார்: முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்குவங்க ஆளுநராக பொறுப்பேற்க உள்ள ஆர்.என்.ரவி ஒரு பாஜ தொண்டர் என விமர்சித்துள்ள மம்தா பானர்ஜி, சி.வி.ஆனந்த போஸ் பாஜ அரசின் அழுத்தத்தாலேயே வௌியேறினார் என குற்றம்சாட்டி உள்ளார்.  மேற்குவங்கத்தில் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கபட்டதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய மம்தா பானர்ஜி, “மேற்குவங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ் எப்படி நீக்கப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மிரட்டப்பட்டார்.

தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை தோற்கடிக்க லோக் பவனில் இருந்து பணம் விநியோகிக்க முயற்சிக்கிறார்கள். லோக் பவனை பாஜ அலுவலகமாக மாற்ற விரும்புகிறார்கள். தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி ஒரு பாஜ தொண்டர். தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி உச்ச நீதிமன்ற கண்டனங்களுக்கு ஆளானார். ஆனால், தமிழ்நாட்டில் வேண்டுமானால் அவர் விரும்பியதை செய்திருக்கலாம்.

இது மேற்குவங்கம். இங்கு அவரது திட்டம் வெற்றி பெறாது. ஒன்றிய பாஜ அரசு அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது. ஆளுநர்கள் பதவிக்காலத்தை அரசியலமைப்பு சட்டப்படி நீடிக்க முடியாது. ஜெகதீப் தன்கருக்கும் அதேயே செய்தார்கள். ஒன்றிய பாஜ அரசு முகமது பின் துக்ளக்கை விட மோசமாக நடந்து கொள்கிறது” என்று காட்டமாக குற்றம்சாட்டினார்.

Tags : R.N. Ravi ,BJP ,West ,Bengal ,Governor ,Bose ,BJP government ,Chief Minister ,Mamata Banerjee ,Kolkata ,Governor of ,C.V. Ananda Bose ,Mamata… ,
× RELATED டெல்லி, அரியானாவில் எய்ட்ஸ் தடுப்பு...