×

டெல்லி, அரியானாவில் எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைக்கு முன்னுரிமை: அதிகாரி தகவல்

புதுடெல்லி: ஒன்றிய சுகாதார அமைச்சகம், எச்.ஐ.வி,எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக டெல்லியில் 7 மாவட்டங்கள், அரியானாவில், 11 மாவட்டங்கள் அடையாளம் கண்டுள்ளது. எச்.ஐ.வி/ எய்ட்ஸ் நோய்க்கு எதிரான மாவட்ட அளவிலான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் தனது உத்தியின் ஒரு பகுதியாக, அரியானா மற்றும் டெல்லியை மையமாகக் கொண்டு,சுகாதார அமைச்சகத்தின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சார்பில் நேற்று ஒரு கூட்டத்தை கூட்டியது.

இதில், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் இயக்குனர் ஜெனரல் ராகேஷ் குப்தா கூறியதாவது: ஒன்றிய சுகாதார அமைச்சகம் நாடு முழுவதும் 219 மாவட்டங்களை அடையாளம் கண்டுள்ளது. இவற்றில் 11 மாவட்டங்கள் அரியானாவிலும், ஏழு மாவட்டங்கள் டெல்லியிலும் அமைந்துள்ளன.அரியானா, டெல்லி ஆகியவை முக்கிய கவனம் செலுத்தப்படும் பகுதிகளாகும். டெல்லியில் தற்போது வயதுவந்தோருக்கான எச்.ஐ.வி பாதிப்பு விகிதம் 0.33 சதவீதமாகவும், சுமார் 59,079 பேர் எச்.ஐ.வி பாதிப்புடனும் உள்ளனர். அரியானாவில் வயதுவந்தோருக்கான எச்.ஐ.வி பாதிப்பு விகிதம் 0.24 சதவீதமாகவும், 59,642 பேர் எச்.ஐ.வி பாதிப்புடனும் உள்ளனர் 2027-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்திற்குள் எச்.ஐ.வி/எய்ட்ஸை கட்டுப்படுத்துவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. எச்.ஐ.வி தடுப்புக்கான இலக்கை அடைவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Delhi, Haryana ,New Delhi ,Union Health Ministry ,Delhi ,Haryana ,Haryana… ,
× RELATED நாடு முழுவதும் கடும் சிக்கல் சமையல்...