×

பிரதோஷ வழிபாடு

தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி  முனையடுவநாயனார் கோயிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அதிகாரநந்தி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகிய சுவாமிகளுக்கு  மஞ்சள்பொடி, மாபொடி, திருமஞ்சன திரவியம், பால், தயிர், இளநீர்,  பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம்  நடைபெற்றது. சிவனடியார்களால் திருமுறைகள் பாடப்பட்டது. இதில், கலந்து கொண்ட  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED பட்டாசு திரி பதுக்கிய இருவர் கைது