×

ஆட்களை திரட்ட பாஜ புது டெக்னிக்

கோவை மாவட்டத்தில் அதிமுகவிடம் 3 தொகுதிகளை கேட்டு, அடம் பிடித்துக் கொண்டிருக்கும் பாஜ தங்களது வலிமையை காட்டும் வகையில் பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்தி வருகிறது. மேலும், கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகளுக்கான பயிற்சி அளிக்கும் வகையில், அக்கட்சி சார்பில் பயிலரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜ மாவட்ட அலுவலகத்தில், அக்கட்சி பொருளாளர்களுக்கான மாநில கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்க உள்ளதாக பாஜ நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். ஆனால் நேற்று நயினார் நாகேந்திரன் சென்னையில் இருந்த நிலையில், அக்கூட்டத்திற்கு அவர் வரவில்லை. இதேபோல கோவையில் இருந்த அண்ணாமலைக்கு, வேறு பணிகள் இருந்ததான் காரணமாக அவரும் பங்கேற்கவில்லை. இதனால் இக்கூட்டத்திற்கு சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதேபோல கூட்டங்களுக்கு அதிக அளவிலான நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை வரவழைக்க, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கூட்டங்களில் பங்கேற்க இருப்பதாக அழைப்பிதழ்களை அனுப்புவதை பாஜ நிர்வாகிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை நம்பி அக்கட்சியினர் மற்றும் பத்திரிகையாளர்கள் அங்கு சென்றால், அவர்கள் யாரும் வருவதில்லை. இதனால் பாஜ தொண்டர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்புவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

Tags : BJP ,Coimbatore ,AIADMK ,
× RELATED நாகை – இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை