×

திமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் நிறைவு

சென்னை: திமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் நேற்று மாலையுடன் முடிந்தது. கடைசி நாளான நேற்று அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை தொகுதிக்கும், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் தொகுதிக்கும் விருப்ப மனு அளித்தனர். திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி கோவை வடக்கு, கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளுக்கு விருப்ப மனு வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் கவுதம சிகாமணி திருக்கோவிலூர் தொகுதிக்கும், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகி ராமனின் மகன் ஜே.வி.எஸ்.ஆறுமுகம் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் விருப்ப மனு அளித்தனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் போடிநாயக்கனூர் தொகுதிக்கு அவரது மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு வழங்கினார். மேலும் தனது பெயரில் போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி ஆகிய 2 தொகுதிகளுக்கும் விருப்ப மனுவையும் அளித்தார்.

* 15,372 விருப்ப மனுக்கள்: மு.க.ஸ்டாலின் போட்டியிட 1,473 பேர் மனு
திமுக சார்பில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Tags : DMK ,Chennai ,Minister ,E.V. Velu ,Tiruvannamalai ,Senthilbalaji ,Karur ,DMK Student Union ,
× RELATED எத்தனை சீட், எந்த சின்னம்? கமல் கட்சி ஆலோசனை