- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- கடற்றொழில் மற்றும் மீனவர்கள் நலத்துறை
- சென்னை
- பரமன்கேணி, செங்கல்பட்டு மாவட்டம்
- திருவள்ளூர் மாவட்டம் பசியாவரம்...
சென்னை,: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.100.84 கோடி செலவில் 8 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் பரமன்கேணியில் வலைபின்னும் கூடம் மற்றும் மீன் ஏலக்கூடம், திருவள்ளூர் மாவட்டம் பசியவரத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய பயிற்சி மையம் ஆகியவை தலா ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் மூன்று மீனவ கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் என மொத்தம் ரூ.100 கோடியே 84 லட்சம் செலவில் 8 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி குப்பத்தில் புதிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.665 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் 13 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
