- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- குமாரி
- நாகர்கோவில்
- தென்காசி மாவட்டம்
- கன்னியாகுமரி மாவட்டம்
- திமுக
- கிழக்கு
- மாவட்டம்…
நாகர்கோவில்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (6ம் தேதி) காலை தென்காசி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். அவருக்கு நாகர்கோவில் அண்ணா சிலை முன்பு திமுக சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து குலசேகரம் அருகே கல்லடிமாமூடு பகுதியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 24 ம் தேதி திறந்து வைத்த மினி ஸ்டேடியம் செல்கிறார். அங்கு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உடன் உரையாடுகிறார். அங்கிருந்து குளச்சல் நகரில் திமுக அயலக அணி மாநில துணை செயலாளர் பாபு வினிபிரட் ஏற்பாட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் அங்கிருந்து இறச்சகுளம் வரும் அவர் அப்பகுதியில் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்துவிட்டு அங்கிருந்து நேராக திருநெல்வேலி சென்று இரவு தங்குகிறார். அடுத்த நாள் காலை 07.03.2026 தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அணி நிர்வாகிகள் சந்திப்பு முடித்து மதியம் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
