×

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே மக்களுக்கு ‘கிப்ட்’ வழங்கிடணும்: தொண்டர்களை உசுப்பேற்றிய எஸ்.பி.வேலுமணி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி நீங்கலாக 7 சட்டமன்ற தொகுதி அதிமுக ஒன்றிய, நகர, பேரூர், பகுதி நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘அதிமுக நிர்வாகிகள் இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்புகளில் பொறுப்புக்கு வரமுடியும். அதற்காக அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும். அந்தந்த பகுதி வாக்காளர்கள் விவரத்தை தெளிவாக அறிந்து அதனை அதிமுக ஆப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்தல் தேதி வெகுவிரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதால் மக்களுக்கு கிப்ட் பொருட்களை விரைவாக வழங்கிட வேண்டும். நாளை நமதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’ என்று உசுப்பேற்றி பேசியுள்ளார்.

கட்சி வேலை செய் என்று சொல்பவர்கள் அந்த வேலை செய்ய பணம் கொடுப்பதில்லை. பிறகு எப்படி வேலை செய்வது. பணம் கொடுத்தால் தான் கட்சி வேலை செய்ய கட்சிக்காரன் வருகிறான். கட்சிக்கு செலவு செய்து விட்டு பதவி கிடைத்தால் சரி, கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று கட்சிக்காரர்கள் முணுமுணுத்தனர்.

Tags : S.P. Velumani ,Tiruppur ,Tiruppur district ,Avinashi ,Former minister ,AIADMK ,
× RELATED தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு!