×

இலக்கியம்பட்டி ஊராட்சியில் வரிவசூல் முகாம்

தர்மபுரி, பிப்.10: தர்மபுரி மாவட்டத்தில் மிகப்பெரிய ஊராட்சிகளில் இலக்கியம்பட்டி ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சியில் நிலுவை வரி வசூல்களை வசூலிக்க, இலக்கியம்பட்டி ஊராட்சி நிர்வாகம் சிறப்பு முகாமை, கடந்த 1ம் தேதி முதல் நடத்தி வருகிறது. இதற்காக சிறப்பு முகாம் நான்கு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிடமனேரி மாரியம்மன்கோயில் அருகில் பிடமனேரி, நெல்லிநகர், மாந்தோப்பு, மொன்னையன் கொட்டாய் பகுதிமக்களும், வெண்ணாம்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, குள்ளனூர், வெண்ணாம்பட்டி பகுதி மக்களும், வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் அருகில் ஸ்ரீராமன் காலனி, ஆசிரியர் காலனி, வேப்பமரத்துக்கொட்டாய், நியூகாலனி, வி.ஜெட்டிஅள்ளி, இ.பி.காலனி பகுதி மக்களும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கலெக்ட்ரேட் பகுதி, அழகாபுரி, செந்தில்நகர், டிரசரிகாலனி, இலக்கியம்பட்டி ஆகிய பகுதி மக்களுக்கும் வரியை செலுத்த வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலக்கியம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சுதாரமேஷ் கூறும்போது, ஊராட்சி பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கான வீட்டுவரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில்வரி, தொழில் உரிமக்கட்டணம் ஆகியவற்றிக்கு வரி செலுத்த சிறப்பு முகாம் நடந்து வருகிறது. முகாம் வரும் மார்ச் 31ம் தேதி வரை நடக்கும். வரி வசூல் முகாமில் வரியை நிலுவையின்றி செலுத்தி, பொதுசுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செவ்வனே நடைபெற ஊராட்சி நிர்வாகத்திற்கு ஊராட்சி மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

Tags : Taxation camp ,Likkiampatti ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா