×

மாவட்டம் முழுவதும் குடியேறும் போராட்டம்


தர்மபுரி, பிப்.10: தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்ககோரி குடியேறும் போராட்டம் நேற்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது. மாநில பொருளாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் இளங்கோவன், செயலாளர் சுசிலா, பொருளாளர் சரஸ்வதி, நிர்வாகிகள் மீனாட்சி, அண்ணாமலை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழமுதன் வாழ்த்தி பேசினார். இதில், 18 பெண்கள் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், பாலக்கோடு தாலுக்கா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் வட்ட செயலாளர் திம்மராயன் தலைமையில் நடந்தது. 26 பெண்கள் உள்பட 240 பேர் கைது செய்யப்பட்டனர். பென்னாகரத்தில் வட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் கரூரான் சிறப்புறையாற்றினார். 147 பெண்கள் உள்பட 251பேர் கைது செய்யப்பட்டனர். பாப்பிரெட்டிபட்டியில் ஒன்றிய செயலாளர் உதயகுமார் தலைமையில் நடந்தது. 8 பெண்கள் உள்பட 16பேர் கைது செய்யப்பட்டனர்.

நல்லம்பள்ளியில் ஒன்றிய தலைவர் துளசிமணி தலைமையில் நடந்தது. போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்ட செயலாளர் குப்புசாமி வாழ்த்தி பேசினார். 32 பெண்கள் உள்பட 79பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை 6மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.பின்னர் மீண்டும் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அதியமான்கோட்டை போலீசார் தடுத்ததால், சாலையோரம் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.தாசில்தார் சரவணன் பேச்சு வார்த்தை நடத்திய போது, தங்களது 3அம்ச கோரிக்கையை நிறைவேற்றும் வரை, போராட்டத்தை கைவிடமாட்டோம் என கூறி இரவு வரை போராட்டத்ைத தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரூரில் மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி தலைமையில் போராட்டம் நடந்தது. சிஐடியூ மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து வாழ்த்தி பேசினார். மாவட்டம் முழுவதும் 6 இடத்தில் நடந்த குடியேறும் போராட்டத்தில் 131 பெண்கள் உட்பட 622 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...