×

கெடுவும் இல்லை.. இழுபறியும் இல்லை.. கூட்டணி வலுவாக உள்ளது : செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை : திமுக எங்களுக்கு கெடு விதிக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில்தான் ஆளும் திமுக கூட்டணியில் நடைபெற்றுவரும் தொகுதிப் பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பில், கூட்டணி குறித்தும் தொகுதிப்பங்கீடு குறித்தும் பேசப்பட்டதாக தகவல் வெளியானது.இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,”இன்று நடந்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு. திமுக எங்களுக்கு கெடு விதிக்கவில்லை, பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை, கூட்டணி வலுவாக இருக்கிறது. தொகுதிப் பங்கீடு பேச்சு தொடர்ந்து நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு எத்தனை தொகுதிகள் என்பதை உங்களிடம் அறிவிக்கிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Chennai ,Tamil Nadu Congress Committee ,Dimuka ,Tamil Nadu ,DIMUKA ALLIANCE ,
× RELATED கோட்டையில் அல்ல; தலைமை செயலகம்...