- தலைமை செயலகம்
- அமைச்சர்
- முத்துசாமி சீமா கலை
- ஈரோடு
- ஷிரி விஜய்
- முத்துசாமி
- ஈரோட் வெஸ்ட்
- திருப்பரங்குந்தரம் விவகாரம்
ஈரோடு: தலைமைச்செயலகம் அருகே இடம் பார்த்து விஜய் கொடி ஏற்றுவாரே தவிர, தலைமைச்செயலகத்தில் அவரால் ஏற்ற முடியாது என அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளேன்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவை பிரதமர் குற்றச்சாட்டுவது தவறானது. பிரதமர் உள்ளூர் தலைவராக இருந்தால், நாங்கள் பேசுவதே வேறுமாதிரி இருக்கும். வெளிமாநிலத்தில் இருந்து வரும் பிரதமருக்கு இங்குள்ளவர்கள் தவறான தகவலை கொடுக்கின்றனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு காரணமாக இருந்தது திமுக தான். நாங்கள் அரசியல் மற்றும் கட்சி ரீதியாக விமர்சனம் வைத்தாலும் பிரதமர் என்கிற மரியாதை வைத்துள்ளோம்.
பிரதமர் மோடி அடிப்படையை ஆராய்ந்து குற்றச்சாட்டை சொல்லியிருக்க வேண்டும். மோடி அரசியல் ரீதியான கருத்தை சொல்லக்கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆய்வு செய்தால், அவர் சொன்னது சரியல்ல. மோடிக்கு தவறான தகவலை கொடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
திமுகவை வீழ்த்தும் சக்தி தவெகவிற்கு இருப்பதாகவும், தலைமை செயலகத்தில் விஜய் கொடி ஏற்றுவார் என செங்கோட்டையன் கூறியது குறித்த கேள்விக்கு, ‘‘தலைமைச் செயலகம் அருகே இடம் பார்த்து விஜய் கொடி ஏற்றுவாரே தவிர, தலைமை செயலகத்தில் ஒருபோதும் கொடி ஏற்ற முடியாது’’ என்றார்.
