×

தைப்பூச விழா சென்னிமலை கோயில் தேர் நிலை சேர்ந்தது

சென்னிமலை, பிப். 10: ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தைப்பூச விழாவில் 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுந்தனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலில் நேற்று முன்தினம் காலை தேர் வடம்பிடிக்கப்பட்டு தெற்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் அன்று மாலை மீண்டும் வடம் பிடிக்கப்பட்டு வடக்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது. நேற்று மாலை 5 மணிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து தேர்நிலைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

தேவஸ்தான திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இன்று (10ம் தேதி) இரவு 7 மணிக்கு பரிவேட்டை குதிரை வாகனக்காட்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து பக்தி இன்னிசை மற்றும் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறுகிறது. 11ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பஉற்சவம் மற்றும் இரவு 9 மணிக்கு பல்சுவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் 12ம் தேதி நடக்கவுள்ளது. அன்று காலை 9 மணிக்கு மேல் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் இரவு 7 மணிக்கு மகா தரிசனம் நடைபெறுகிறது. அப்போது நடராஜ பெருமானும், சுப்ரமணிய சாமியும் முறையே வெள்ளி விமானம் - வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.  இதைத்தொடர்ந்து 13ம் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.
தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நந்தகுமார், சென்னிமலை கோயில் செயல் அதிகாரி அருள்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Chennimalai ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...