- பளை
- சட்டமன்ற உறுப்பினர்
- அப்துல் வஹாப்
- நெல்லை
- திமுக
- முதன்மை செயலாளர்
- தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும்
- குடிநீர் வழங்கல் அமைச்சர்
- நெல்லை மாவட்டம்
- அமைச்சர்
- கே.என் நேரு
- நெல்லை மத்திய மாவட்டம்
- பாளையங்கோட்டை
நெல்லை, மார்ச் 3: திமுக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கேஎன் நேரு தலைமையில், நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ பாளையங்கோட்டை தொகுதியில் 2வது முறையாக போட்டியிட சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் திமுக தலைமை நிர்வாகிகளிடம் விருப்பமனு அளித்தார். நிகழ்வில் நெல்லை கிழக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சி பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்வி சுரேஷ், மானூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன், பகுதி பொறுப்பாளர்கள் தச்சை வடக்கு டாக்டர் சங்கர், மேலப்பாளையம் மேற்கு துபாய் சாகுல், கிழக்கு சாமுவேல், பாளையங்கோட்டை வடக்கு செய்யது முகைதீன், நெல்லை மேற்கு சங்கர், மாவட்ட பிரதிநிதி வல்லநாடு முத்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.
