×

சாலையோர மின் கம்பத்தின் மீது ஆட்டோ மோதி விபத்து மகள் கண்ணெதிரிலேயே தந்தை பலியான சோகம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ராமம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (50). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (45) என்ற மனைவியும், அனுசுயா (19) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை ரமேஷ் ஆட்டோவில் தனது மகளுடன் சிறுமுகை நோக்கி சென்றுள்ளார். ஆட்டோவை ரமேஷ் ஓட்டிச் சென்றுள்ளார். தென்திருப்பதி அருகே உள்ள வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர மின் கம்பத்தில் பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் ஆட்டோவில் பயணித்த ரமேஷ் மற்றும் அவரது மகள் அனுசுயா இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக பலியானார். மகள் அனுசுயா மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Mettupalayam ,Ramesh ,Ramampalayam ,Vijayalakshmi ,Anusuya ,Ramesh… ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!! நெசவாளர்களுக்கு ‘சொந்த வீடு’