- டெல்லி…
- பெங்களூரு…
- நைனார்
- பாஜக
- ஜனாதிபதி
- நைனார் நாகேந்திரன்
- நெல்லை
- மத்திய அமைச்சர்
- பியுஷ் கோயல்
- சென்னை
- அஇஅதிமுக
நெல்லையில் நேற்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: அதிமுக, பாஜ தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் 24ம் தேதி (நாளை) சென்னை வருகிறார். இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து முறையான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும். எங்களது கூட்டணி வெற்றிக் கூட்டணி. நாங்கள் பேச்சுவார்த்தையை டெல்லியில் நடத்துவோம்.
பெங்களூரில் நடத்துவோம். எங்கு வேண்டுமானாலும் நடத்துவோம். இப்போ சென்னையில் நடத்தப் போகிறோம். எங்கள் கூட்டணியைப் பற்றி வேறு யாரும் கவலைப்பட வேண்டாம். முதலில் மக்களைப் பற்றி கவலைப்படுங்கள். ஐந்து அணிகள் அல்ல, எத்தனை அணிகள் வந்தாலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மட்டுமே இருக்கும். கூட்டணி தாக்கம் இருக்காது. ஓபிஎஸ் மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது.
அவர் தனியாக கட்சி துவங்காதது ஏன் என்று இப்போதுதான் புரிகிறது. சரத்குமார், தனியாக நிர்வாகிகளை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை. நாள்தோறும் நானும் பல நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம். அந்த வகையில் சசிகலாவும் கட்சியை தொடங்கி உள்ளார். பாஜ தேசிய தலைமை என்னை எங்கு போட்டியிடச் சொன்னாலும் போட்டியிட தயாராக இருக்கிறேன். குறிப்பாக நெல்லை, நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் எனக்கு கூடுதல் செல்வாக்கு உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
