×

சொன்னாரு..! செஞ்சாரு..!! நெசவாளர்களுக்கு ‘சொந்த வீடு’

சொன்னாரு: திமுக 2021ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நெசவாளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

* செஞ்சாரு: தமிழகத்தின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான நெசவு தொழிலை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அடிப்படைத் தேவையான இருப்பிட வசதியை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, தகுதியுள்ள நெசவாளர்களுக்குச் சொந்தமாக வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்பதாகும்.

அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த ரூ.2.60 லட்சம் நிதியுதவியானது, தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். நெசவாளர்கள் தரமான வீடுகளைக் கட்டி முடிக்க ஏதுவாக, மானியத் தொகை ரூ.1.40 லட்சம் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இது ஒரு முழுமையான மானியத் திட்டமாகும்.

இதில் அரசு வழங்கும் தொகையைத் திரும்பச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த வீடுகள் நெசவாளர்களின் வாழ்விடத்திலேயே தறிக் கூடங்களை அமைப்பதற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்க ஊக்குவிக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும், சொந்தமாக குறைந்தது 400 சதுர அடி நிலம் வைத்திருக்க வேண்டும், அவர் ஒரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்,

சம்பந்தப்பட்ட நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, மாவட்ட அளவிலான அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு இத்திட்டம் அனுமதிக்கப்படுகிறது. வீடு கட்டும் திட்டம் மட்டுமல்லாது, நெசவாளர்களின் உற்பத்திச் செலவைக் குறைக்க கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் வரையும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் வரையும் இலவச மின்சாரத்தையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

‘வீடு இல்லாத நெசவாளர்களே இல்லை’ என்ற நிலையை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். திமுக அரசின் இந்த வாக்குறுதி அமலாக்கம், நெசவுத் தொழிலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும், அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

Tags : Sonnaru ,Sencharu ,DMK 2021 ,MK Stalin ,Tamil Nadu… ,
× RELATED ரயில்கள் மீது கல்வீசும் நபர்கள் மீது...