×

பல்வேறு திட்டங்களில் பயன்பெறும் வகையில் அடையாள எண் பெற விவசாயிகள் செயலியில் பதிவு செய்யலாம் வேளாண் உதவி இயக்குனர் தகவல்

வேலூர், மார்ச் 2: அடையாள எண் பெற இன்னும் 3 நாட்களே உள்ளதால் விவசாயிகள் உடனே செயலியில் பதிவு செய்ய வேண்டும் என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பல்வேறு திட்டங்களில் பயன்பெறும் வகையில் தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது பெயரில் விவசாய நிலம் நேரடி தனிபட்டாவாக இருந்து, இதுவரை விவசாய தனித்துவ அடையாள எண் பெறாமல் இருந்தால் உடனடியாக பதிவு செய்து அடையாள எண் பெறலாம்.

இதற்காக அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், தங்கள் பகுதி வேளாண்மை உழவர் நல அலுவலர்கள், பொது இ-சேவை மையங்களை அணுகி, தங்களது நிலத்தின் தனி பட்டா நகல், ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றுடன் நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இனிமேல் உரங்கள், பயிர் காப்பீடு மற்றும் வேளாண் மானிய திட்டங்கள் பெற விவசாய தனித்துவ அடையாள எண் கட்டாயம்.

அடையாள எண் பெற இன்னும் 3 நாட்கள் தான் கால அவகாசம் உள்ளது. எனவே உடனே பதிவு செய்து கொள்ளவும். மேலும் ‘கூகுள் ப்ளே ஸ்டோரில் Farmer Registry TN ’என்ற மொபைல் ஆப் பதிவிறக்கி தாங்களாகவே பதிவு செய்து அடையாள எண் பெறலாம் என கணியம்பாடி வட்டார வேளாண் உதவி இயக்குனர் லட்சுமணன் தெரிவித்தார்.

Tags : Assistant Director of Agriculture ,Vellore ,Assistant Director ,Agriculture ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அரசு...