×

தமிழ்நாடு, தெலங்கானா நன்னடத்தை அலுவலர்கள் 17 பேருக்கு பட்டம் இயக்குனர் வழங்கினார் வேலூர் ஆப்காவில் 3 மாத காலம் பயிற்சி

வேலூர், பிப்.28: வேலூர் ஆப்காவில் 3 மாதம் பயிற்சி பெற்ற தமிழ்நாடு, தெலங்கானா நன்னடத்தை அலுவலர்கள் 17 பேருக்கு ஆப்கா இயக்குனர் பிரதீப் பட்டங்களை வழங்கினார். வேலூரில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக அகாடமியில் (ஆப்கா) சிறை நன்னடத்தை அலுவலர்களுக்கான 8வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. ஆப்கா துணை இயக்குனர் கோவிந்தராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஆப்கா இயக்குனர் பிரதீப் கலந்து கொண்டு தமிழ்நாடு, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த சிறை நன்னடத்தை அலுவலர்களுக்கு பல்வேறு துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை வழங்கி பேசினார்.

இதில் தெலங்கானா மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையைச் சேர்ந்த 9 அலுவலர்கள், தமிழ்நாடு நன்னடத்தை துறையைச் சேர்ந்த 8 அலுவலர்கள் என 17 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இவர்களில் 4 பெண் அலுவலர்கள் ஆவர். இவர்கள் சமூகப் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றுள்ளனர். இந்த 3 மாத கால பயிற்சித் திட்டம், காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்தின் திருத்தப்பட்ட பயிற்சி கையேட்டின்படி வழங்கப்பட்டது. இதில் திறன் சார்ந்த கற்றல், முறையான வழக்கு மேலாண்மை பயிற்சி, பாலின உணர்வுடன் கூடிய நன்னடத்தை சேவைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மதன்ராஜ், பியூலா இம்மானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu, Telangana ,AFCA Vellore ,Vellore ,AFCA ,Pradeep ,Academy of Prisons and Correctional Administration ,APCA ,
× RELATED ரயில்ஒன் செயலியில் முன்பதிவில்லா...