×

வேன் மீது கார் மோதி டிரைவர் பலி

வாடிப்பட்டி, மார்ச் 2: மதுரை சிக்கந்தர்சாவடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (39). கார் டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு காரில் சென்று விட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து கொண்டிருந்தார். அவர் ஓட்டி வந்த கார் நேற்று முந்தினம் இரவு வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி மேம்பாலத்தை கடந்து வந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த பால் வேன்மீது மோதியது.

இதில் பால் வேன் கவிழ்ந்த நிலையில் காரின் இடிபாடுகளில் சிக்கிய கார் டிரைவர் ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த வேன் டிரைவரான அய்யங்கோட்டையைச் சேர்ந்த செல்லப்பாண்டி சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Vadipatti ,Rajesh Kannan ,Sivan Kovil Street, Sikandarsavadi, Madurai ,Kodaikanal ,Madurai ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...