நத்தம், மார்ச். 2: நத்தம் அருகே காட்டுவேலம்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல் (44). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று நத்தம் பைபாஸ் சாலை சேர்வீடு பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது நத்தம் நோக்கி சாணார்பட்டி ஒத்தக்கடையை சேர்ந்த ராகுல் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் இவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பழனி வேலை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
