×

கல்லூரி இணை இயக்குனர் அலுவலகம் முன் பல்கலை ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்

தஞ்சாவூர், மார்ச் 2: பல்கலைக்கழக பேராசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சை கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பேராசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. உடனடியாக சிஎஸ் தொகை உட்பட நிலுவைத் தொகை அனைத்தையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர். அரசு உடனடியாக செவி சாய்க்காத பட்சத்தில் வருகின்ற மார்ச் 5 மற்றும் 6ம்தேதி சென்னை கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.

 

Tags : University Teachers' Union ,Joint ,of College Education ,Thanjavur ,Director of ,College Education ,Thanjavur… ,
× RELATED மன அழுத்தம் காரணமாக 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: மாங்காடு அருகே சோகம்