×

அரவம்பட்டி பிரிவு சாலையில் முன்னெச்சரிக்கை சோலார் லைட் அமைக்க வேண்டும்

கந்தர்வகோட்டை, மார்ச்.2: புதுக்கோட்டை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரவம்பட்டி பிரிவு சாலைக்கு முன்னெச்சரிக்கை சோலார் லைட் அமைக்க வாகன ஒட்டிகள் கோரி க்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள தஞ்சை-மதுரை தேசிய நெடுச்சாலையில் தினசரி அதிக அளவில் பேருந்துகளும், லாரிகளும், கனரக வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் சென்று வருகிறது.

இந்த தேசிய நெடுஞ்சாலையில் அரவம்பட்டி, ராமுடையான்பட்டி மற்றும் உடையார் தெரு, முத்தரையர் தெருகளுக்கு இருபுறமும் பிரிவு சாலை உள்ளது. இந்த பிரிவு சாலையில் நகர பேருந்துகளும், லாரிகளும், இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. தேசிய நெடுச்சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பிரிவு சாலை இருப்பது தெரியாது பிரிவு சாலையில் வழியே வரும் வாகன ஓட்டிகளுக்கு பிரதான சாலையில் வரும் வாகனம் தெரிய வாய்ப்பு இல்லை.

ஆகையால் இந்த இடத்தில் வாகன விபத்து அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலைதுறையினர் சாலையில் இருபுறமும் சிகப்பு நிற முன்னேச்சரிக்கை சோலார் லைட் பொருத்த வேண்டும் எனவும், கிராமசாலை துறையினார் உடையார் தெரு, மற்றும் அரவம்பட்டி சாலையில் வேக தடை அமைந்து இரவில் ஒளிரும் வெள்ளை நிற கோடுகள் போடவேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும், பாதசாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Aravampatti section ,Kandarvakottai ,Pudukkottai-Thanjavur National Highway ,Thanjavur-Madurai National Highway ,Kandarvakottai, Pudukkottai district ,
× RELATED வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்