×

அரியலூர் உட்கோட்ட போலீசாரால் மீட்கப்பட்ட 76 செல்போன்கள்

ஜெயங்கொண்டம், மார்ச் 2: அரியலூர் மாவட்டம், அரியலூர் உட்கோட்டத்தில் காணாமல் போன அல்லது திருடு போன சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான 76 மொபைல் போன்கள் மத்திய உபகரண அடையாளப் பதிவேடு மூலமாக மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மீட்கப்பட்ட செல்போன்களை அரியலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சாலை இராம் சக்திவேல் உரிமையாளர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன், காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

 

Tags : Ariyalur ,Utkottam ,Jayankondam ,Ariyalur Utkottam, Ariyalur district ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்