×

பூலாம்பட்டி அருகே பாலமலையில் தீடீர் தீயால் பரபரப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இடைப்பாடி, பிப்.9: பூலாம்பட்டி  காவிரியாற்றின் மறுபுறம் பாலமலை உள்ளது. இயற்கையும், பசுமையும் ஒன்றாக  இணைந்த பாலமலையில் தற்போது வெயிலால் மரங்கள் காய்ந்து வருகிறது.  இந்நிலையில், விஷமிகள் சிலர் பாலமலையில் தீ  வைத்ததால், இப்பகுதி முழுவதும்  நேற்று இரவு தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுகுறித்து வனத்துறை  அதிகாரிகள் கண்காணித்து பாலமலையில் தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palamalai ,Poolampatti ,
× RELATED புதிய வீடுகள் கட்டித்தர கலெக்டரிடம் கோரிக்கை