×

விஜய்யின் மனைவி விவாகரத்து மனு: பேசுவதற்கு நமக்கு நோ ரைட்ஸ்; குஷ்பு ஆதரவு

சென்னை விமான நிலையத்தில் நடிகை குஷ்பு நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு, பாஜ தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறது என்பது குறித்து தெரிய வரும். விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி, மனு தாக்கல் செய்திருப்பது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அதை அரசியல் ஆக்க கூடாது. கணவன்- மனைவி இடையே உள்ள பிரச்னைகளை நாம் பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தனித்து நிற்பதற்கு எந்த தகுதியும் கிடையாது. அவர்களுக்கு அந்த தைரியமும் கிடையாது. பாஜவை தயவுசெய்து காங்கிரசுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். பாஜவிற்கு உள்ள தைரியம், தமிழ்நாட்டில் எவருக்கும் வராது. வரும் சட்டமன்றத் தேர்தலில் குஷ்பு போட்டியிடுகிறாரா, இல்லையா என்பது முக்கியம் கிடையாது. எங்கள் கட்சி, எங்கள் கூட்டணி, எத்தனை இடங்களில் போட்டியிட்டு, நாங்கள் வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி, மக்களுக்கு சேவை செய்யப் போகிறோம் என்பதுதான் முக்கியம். இவ்வாறு குஷ்பு கூறினார்.

* அதிமுகவே கோயில், உலகம் என இருந்த என்னை கட்சி துரோகி முத்திரை குத்தி நீக்கியவர்கள் ஜெயிக்க கூடாது: சசிகலா ஆதரவாளர் தீவிர பிரசாரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் உறுதியாகவில்லை. இதுபற்றி எந்த கவலையும் இல்லாமல் ஐந்தாம் படையில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் வீடுவீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் சசிகலா கட்சி ஆதரவாளர் திருத்தணி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன். கடந்த சட்டமன்ற தேர்தலில் சொந்த கட்சிக்கு துரோகம் செய்ததாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தன்னை அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க காரணமாக இருந்தவர்கள் என்றைக்கும் எம்எல்ஏ ஆக கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகிறார்.

சசிகலா அணியில் தீவிரமாக செயல்பட்டு வரும் அவர், சசிகலா கட்சி பெயர் கூட இதுவரை அறிவிக்காவிட்டாலும் கூட்டணி குறித்து முடிவு அறிவிக்காத நிலையில், திருத்தணி தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தான் கொண்டு வந்த திட்டங்கள் குறித்தும், அதிமுகவிலிருந்து நீக்கியவர்களுக்கு பாடம் கற்பிக்க எனக்கு ஓட்டு போட்டு ஐந்தாவது முறையாக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதோடு அவரது ஆதரவாளர்களும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். எதிரி வெற்றி பெறக் கூடாது என்பதில் உறுதியாக நரசிம்மன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், அவரது எதிரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags : Vijay ,Khushbu ,Chennai airport ,BJP ,Tamil Nadu ,
× RELATED புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு...