×

சட்டமன்ற தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் ஐஎன்டியுசிக்கு உரிய பிரதிநிதித்துவம்: செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி மாநில செயற்குழு கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்தது. தலைவர் மு.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜி.ஜெயபால், பொதுச் செயலாளர் ராயபுரம் கோபிநாத் பன்னீர்செல்வம், செயலாளர் ஜெ.மதியழகன் முன்னிலை வகித்தனர். சென்னை மாவட்ட தலைவர் ஆலந்தூர் கே.நாகராஜ் வரவேற்றார். கூட்டத்தில், நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் சோனியா, ராகுல் எந்த கூட்டணி அமைக்கிறார்களோ அந்த கூட்டணி வெற்றிக்கு, முழு ஆதரவை கொடுத்து மகத்தான வெற்றி பெற செய்து ஆட்சியில் அமர்த்துவோம், சட்டமன்ற தேர்தலில் ஐஎன்டியுசிக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், அரசு போக்குவரத்து ஓய்வுபெற்ற 93 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலை நிலுவை தொகையை உடனே தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதில் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் வாழப்பாடி இராம.சுகந்தன், துறைமுகம் ஐ.என்.டி.யு.சி தலைவர் வி.சி.முனுசாமி, பொதுச் செயலாளர்கள் கே.குணசேகரன், ஜி.சரவணன், செயலாளர் இ.ரவிக்குமார், கோவை ஆறுசாமி உள்ளிட்ட நிர்வாதிகள் கலந்து கொண்டனர்.

Tags : INTUC ,Chennai ,Tamil Nadu ,committee ,Royapettah ,President ,M. Panneerselvam ,Vice President ,G. Jayapal ,General Secretary ,Royapuram Gopinath Panneerselvam ,J. Mathiyazhagan ,District ,Alandur K. Nagaraj… ,
× RELATED திமுக இருக்கும் வரை பாஜகவின் திட்டம்...