×

ஓசூரில் சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி தாலுகாவில் மட்டும் மார்ச் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 14-ல் முழு வேலைநாளாக செயல்படும் என கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார்.

ஓசூரில் புகழ்பெற்ற ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழாவினை முன்னிட்டு, வரும் மார்ச் 3 செவ்வாய்க்கிழமை அன்று ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி ஆகிய வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாளானது அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தும் என கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில், மார்ச் 14, 2026 சனிக்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் முழு வேலைநாளாகச் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முக்கிய சந்திப்புகளில் தற்காலிக கண்காணிப்புக் கோபுரங்கள் மற்றும் CCTV கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம்: தேரோட்டப் பாதையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, மாற்றுப் பாதைகளில் போக்குவரத்தைச் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Chandra Sudeswarar Temple Thar Festival ,Hosur ,Sri Chandra Sudeswarar Temple Thar Festival ,Osur, Krishnagiri District ,Osur ,Chulagiri ,Thenkanikkottai ,Ancheti Taluga ,
× RELATED 73வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர்...