×

தாக்குதலை தொடங்கி வைத்து விட்டீர்கள்; இனி முடிவு உங்கள் கையில் இல்லை: ஈரான்

தெஹ்ரான் : ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட இடங்களில் அமெரிக்க – இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் அருகே அமெரிக்கா படைகளை குவித்து வந்த நிலையில் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் அணுஆயுதம் ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் பேச்சு நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலை அடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.

தங்கள் நாட்டின் உச்ச தலைவரும், அதிபரும் பாதுகாப்பாக உள்ளதாக ஈரான் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தாக்குதலை தொடங்கி வைத்து விட்டீர்கள்; இனி முடிவு உங்கள் கையில் இல்லை என கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் முக்கிய நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. 70 ஏவுகணைகள் வரை இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஈரான் பதில் தாக்குதலுக்கு தயாராவதால் இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியது. ஈரானில் உள்ள இந்தியர்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதை தவிர்க்க இந்திய தூரதரம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : Iran ,TEHRAN ,U.S. ,ISRAELI MILITARY ,United States ,US ,
× RELATED 73வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர்...