×

காலாவதி உரம் விற்றால் உரிமம் ரத்து

சின்னமனூர், பிப்.28: வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: தனியார் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை மையங்களில் இருப்பு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்ய கூடாது. விவசாயிகளுக்கு உரிய முறையில் பட்டியலிடப்பட்டு ரசீது வழங்கப்பட வேண்டும். தடை செய்யப்பட்ட அல்லது காலவதியான பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்ய கூடாது.

விற்பனை உரிமங்கள் விவசாயிகள் பார்வையில் தெரியுமாறு கடையில் வைக்க வேண்டும். விலை பட்டியல் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அனுமதி இல்லாத உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்ய கூடாது. இவ்விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985 மற்றும் பூச்சிச்கொல்லி சட்டம் 1968ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.

 

Tags : SINNAMANUR ,AGRICULTURE DEPARTMENT ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...