×

சிறுமிக்கு டார்ச்சர் வாலிபருக்கு ஆயுள் தண்டனை: திண்டுக்கல் போக்சோ கோர்ட் தீர்ப்பு

திண்டுக்கல், பிப். 28: பழநி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (எ) சின்னா (34). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2024ல் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் பழநி அனைத்து மகளிர் காவல்நிலை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சத்தியதாரா தீர்ப்பு வழங்கினார். இதில் பிரகாஷிற்கு ஆயுள் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

 

Tags : Dindigul ,POCSO Court ,Prakash (A) Chinna ,Palani ,Palani… ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்