×

மாசி மக திருவிழா வேதாரண்யேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் வீதி உலா

வேதாரண்யம், பிப்.28: நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசி மகத் திருவிழா, 63 நாயன்மார்களுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில், சந்திரசேகர் சுவாமி சப்பரத்தில் வீதி உலாநடைபெற்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசிமக பெருவிழா கடந்த 13ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 14ம் நாள் மாசிமக திருவிழாவில் சந்திரசேகர சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

பின்பு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில், சந்திரசேகர சுவாமி மற்றும் அம்பாளுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. மேலும் 73 நாயன்மார்கள் (63 நாயன்மார்கள், 10 தொகையடியார்கள்) எழுந்தருளி முக்கிய வீதி வழியாக வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (28 ம் தேதி) நடைபெற உள்ளது.

 

Tags : Nayanmars ,Vedaranyeswarar temple ,Masi Maham festival ,Vedaranyeswarar ,Vedaranyeswarar Swamy temple ,Nagapattinam district ,Chandrashekar Swamy ,
× RELATED மன அழுத்தம் காரணமாக 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: மாங்காடு அருகே சோகம்