×

தருமபுரம் ஞானாம்பிகை மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை, பிப்.28: தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை, தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ரேவதி வரவேற்றார்.

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல் கலந்து கொண்டு, இந்திய ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்டுள்ள 22,195 உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாகவும், விண்ணப்பித்த மாணவிகளுக்கு தொடர்ந்து மயிலாடுதுறை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வாயிலாக இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்துவது தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.பொருளியல்துறை உதவிப் பேராசிரியர் இந்திராதேவி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

 

Tags : Dharmapuram Gnanambika Women's College ,Mayiladuthurai ,Dharmapuram Gnanambika Government Women's Arts College ,Revathi.… ,
× RELATED மன அழுத்தம் காரணமாக 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: மாங்காடு அருகே சோகம்