- மல்லுக்கட்டு பமகா
- பன்ருட்டி பிளாக்
- கடலூர்
- மாவட்டம் பன்ருதி சட்டமன்ற தொகுதி
- பன்ருதி
- நெல்லிக்குப்பம்
- தமிழ்நாடு தொழிலாளர் கட்சி
- ராதாகிருஷ்ணன்
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி சுவையான பலாப்பழம், முந்திரிக்கு பிரசித்தி பெற்றது. பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகளை உள்ளடக்கிய இத்தொகுதியில் மொத்தம் 2.40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 1952 தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ராதாகிருஷ்ணன் 28,972 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 1967, 1971 தேர்தல்களில் திமுக சார்பிலும் 1977, 1980, 1984 தேர்தல்களில் அதிமுக சார்பிலும், 1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாமக சார்பிலும் என 6 தேர்தகளில் பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.
1989ல் டாக்டர் நந்த கோபாலகிருஷ்ணனும், 1996 தேர்தலில் டாக்டர் ராமசாமியும் திமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அடுத்து வந்த 2001, 2006, 2021 ஆகிய 3 தேர்தலில் வேல்முருகன் வெற்றி பெற்றார். இதில் 2021ல் மட்டும் உதயசூரியன் சின்னத்தில் வேல்முருகன் களமிறங்கி இருந்தார். அதற்கு முந்தைய தேர்தல்களில் பாமகவில் அவர் வெற்றி பெற்றிருந்தார். மேலும் 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் களமிறங்கிய சிவக்கொழுந்து (தேமுதிக), 2016ல் அதிமுகவில் போட்டியிட்ட சத்யா பன்னீர்செல்வமும் வெற்றி பெற்றனர்.
வன்னியர்கள், பட்டியல் இனமக்கள் மட்டுமின்றி இதர பிரிவினர்கள், இஸ்லாமியர்கள் வசிக்கும் இத்தொகுதியில் கடந்த காலங்களில் திமுக, அதிமுக என மாறி மாறி வெற்றிவாகை சூடியுள்ளது. முதலில் யானை சின்னத்தில் பாமக போட்டியிட்டு வென்ற தொகுதி பண்ருட்டி என்பதால் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அக்கட்சி முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி அல்லது மாவட்டத் தலைவர் கெளரி சங்கரை களமிறக்கி பலாவை மீண்டும் ருசிக்க தங்கள் கட்சிக்கு இலை தலைமையிடம் பிடிவாதமாக வாய்ப்பு கேட்டுள்ளது.
போதாதற்கு முரசும் இத்தொகுதிக்கு கண்வைத்துள்ளது. ஆனால் பிளவுபட்ட பாமகவை சுட்டிக் காட்டும் தொகுதி அதிமுக முன்னணி நிர்வாகிகளோ இலைதான் போட்டியிட வேண்டுமென எடப்பாடியிடம் வலியுறுத்தி வருகின்றனர். முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட முன்னணிகள் விருப்ப மனுவையும் தயாராக போட்டு வைத்துள்ளனர்.
