×

இந்தியாவில் எந்த மாநிலமும் செய்ய முடியாத அளவு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

கோவை: இந்தியாவில் எந்த மாநிலமும் செய்ய முடியாத அளவு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என கோவையில் திமுக மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் “என்றைக்கும் மக்கள்தான் எஜமானர்கள்; நாமெல்லாம் சேவகர்கள். இந்தியாவில் எந்த மாநிலமும் செய்ய முடியாத அளவு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பல்வேறு இடர்ப்பாடுகளை கடந்து அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். மக்களைத் தேடி மருத்துவம் உள்பட மருத்துவத் துறையில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். ஒருநாள் முழுக்க பட்டியல் போடும் அளவுக்கு திமுக அரசு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது” என உரையாற்றினார்.

Tags : India ,Chief Minister MLA K. Stalin ,Goa ,Chief Minister ,MLA ,Timuka West Zone Partial Agents Conference ,K. Stalin ,
× RELATED பண்ருட்டி தொகுதிக்கு மல்லுக்கட்டும் பாமக