×

கள்ளழகர் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.77 லட்சம்

மதுரை, பிப். 27: அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலில் மாதந்தோறும்உண்டியல் காணிக்கைகள் கணக்கிடப்படுவது வழக்கம். இதன்படி நடப்பு மாதத்திற்கான பணிகள் திருக்கல்யாண மண்டப வளாகாத்தில் நேற்று நடைபெற்றது.

இதன் முடிவில், பக்தர்கள் தரப்பில் செலுத்தப்பட்ட ரூ.77 லட்சத்து 50 ஆயிரத்து 582 ரொக்கம்,
65 கிராம் தங்கம் மற்றும் 460 கிராம் வெள்ளி பொருட்கள் கிடைத்திருந்தது. இந்த பணிகளில் கோயில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன், கூடழலகர் பெருமாள் கோயில் உதவி ஆணையர் பிரதீபா, கண்காணிப்பாளர்கள் அருட்செல்வம், ரம்யா சுபாஷிணி, அருணாதேவி, பிஆர்ஓ முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Tags : Kallazhagar Temple ,Madurai ,Alagarkovil ,Thirukalyana Mandapa ,
× RELATED கறம்பக்குடி பகுதியில் பூத்து குலுங்கும் செண்டி பூக்கள்